நடிகை லொஸ்லியா தற்போது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
இலங்கையில் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு பிக்பாஸ் வீட்டி.ல் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது
பிக்பாஸில் கவினின் காதல்வலையில் விழுந்த இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின்பு வந்த தந்தை எண்ட்ரியாகி பேரதிர்ச்சி கொடுத்தார். தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற பின்பும் கவினை காதலித்தே வந்தார்.
ஆ.னால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு இருவருக்கும் எந்தவொரு பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் கவின் லொஸ்லியா காதல் என்ன ஆனது என்பது தெரியாமல் ரசிகர்கள் ஒரு புறம் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு லொஸ்லியாவின் தந்தை தான் வேலை செய்து வந்த நாட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தந்தையின் இறப்பினை தாங்கமுடியாமல் சில மாதம் சமூகவலைத்தள பக்கம் வராமல் இருந்தார். தற்போது சோகத்திலிருந்து மீண்டு வந்த லொஸ்லியா சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரது முதல் படமான ப்ரண்ட்ஷிப் படத்தினைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் லொஸ்லியா டுவிட்ட.ர் பக்கத்தில் கருப்பு நிற ஆடையணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசி.கர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.