
காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்திலேயே இன்று (வியாழக்கிழமை) இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக அமைச்சின் ஆலோசகர் அப்துல் சமத் ஹமீத் போயா தெரிவித்துள்ளார்.