
இலங்கையில் பொதுப்போக்குவரத்து சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். அடிக்கடி இடம்பெற்று வரும் விபத்துக்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் பாரவூர்தி அனுமதிப்பத்திரம் மாத்திரம் பயணிகள் பேருந்தைச் செலுத்துவதற்கான தகுதியற்றது எனவும் தெரிவித்த அவர், சாரதிகளுக்கு இருவாரகாலம் விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்.