கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் திரு. வ.கனகசிங்கம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். கிரான்குளத்தைச் சேர்ந்த இவரது நியமனமானது அப்பகுதி மக்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு கிரான்குளத்திலுள்ள சீமூன் கார்டன் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. சி . புவனேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி . சி. அமலநாதன் { மேலதிக செயலாளர், பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு- சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் } அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி { பணிப்பாளர் – சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழகம் } , திருமதி ந. சத்தியானந்தி { பிரதேச செயலாளர் , பிரதேச செயலகம் , மண்முனைப்பற்று } திரு. அ. பகீரதன் { பதிவாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் } ஆகியோரும் கல்வித்துறையினர் , கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal