
தேவையான பொருட்கள் : பூண்டு(உள்ளி) – 250 கிராம், செத்தல் மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை : பூண்டை தோல் உரிக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு, பூண்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, செத்தல் மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல்லையை நீக்கும். இதய நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.