பழனியப்பன் சிவராமலிங்கம்

புத்தியுள்ள பெண்.. தன் கணவனை இராஜாவாக்கி..தான் இராணியாக வாழ்கிறாள்..!
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்..!
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள்..!
புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அளித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்..!
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள்..!
புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் மேலும் சீர்படுத்திவிடுகிறாள்..!
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் பிடிக்கிறாள்..!
புத்தியில்லாதவள் ஆடம்பர வாழ்க்கைக்காக அடகு வைத்து.. கண்ணீர் சிந்துவாள்..!
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள்..!
புத்தியில்லாதவள் பெண்..பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களிடம் இருப்பதேயில்லை..!
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள்..!
புத்தியில்லாத பெண் எல்லோரையும் பகைத்து..போராடியே.. வாழ்ந்து முடித்து விடுகிறாள்..!
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள்..!
புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை..!
புத்தியுள்ள பெண் தனக்கானதை உருவாக்கி கொள்கிறாள்..!
புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்..!
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை..!
புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்..!
புத்தியுள்ள பெண் எதையும் உருவாக்குகிறாள்..!
புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்..!
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள்.!
புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்..!
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள்..!
புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவாள்..!
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள்..!
புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்..!
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள்..!
புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்..!
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம்..!
புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே..!
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள்..!
புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்..!
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள்..!
புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்..!
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள்..!
புத்தியில்லாதவள் எல்லாரையும்..வகை தெரியாமல் தன் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்..பாதிப்பை கடைசியில் உணர்கிறாள்..!
புத்தியுள்ள பெண் “நோ” சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள்..!
புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்..!
புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்…!
புத்தியில்லாதவள் குற்றப்படுத்தி கொண்டே இருப்பாள்..!
புத்தியுள்ளவள் எப்பொழுதுமே..மற்றவர்களின் நற்குணங்களை சுட்டிகாட்டி பாராட்டுபவளாக இருப்பாள்..!
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி..!
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள்..!
புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்..!
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள்..!
புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு..!
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் பெரியவர்களையும்.. உயர்வாக எண்ணுவாள்..!
புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்..!
புத்தியுள்ள பெண் மீதம் இல்லாமல்..சரியாக சமைப்பாள்..!
புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்..!
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள்..!
புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்..!
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள்..!
புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…!
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும்..!
புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது…!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal