
எழுதியவர் – இராகவேந்திரன்
மூச்சு திணறுபவனுக்கு
திறந்தவெளி…
குழப்பவாதிக்கு
நல் தீர்வு…
தனிமை ஏற்பவனுக்கு
நல் நண்பவன்…
ஆகாசம் அளப்பவனுக்கு
பெரும் சிறகு..
கற்பனையாளனுக்கு
ஆழி ஊற்று..
கண்ணை மூடிக்கொண்டவனுக்கு
உள் உணர்வாய்..
உனை தொடரும்
உனை ஏற்கும்
உனை பக்குவபடுத்தும்
ஒரு புத்தகம்..