எழுதியவர் – கார்த்திகேயன்.

கௌரவக்
கொலைகளையும்,
காதல்
கல்லறைகளையும்
தாண்டிய
எங்கள் பழைய காதலுக்கு
புதிய கவிதை
எழுதுகிறேன்………….
வாலிபம் ஓடிவிட்டது,
வயதும் கூடிவிட்டது,
கண்ணின் கருவிழியும்
புரையோட
தொடங்கி விட்டது…………
மாலையிட்ட சொந்தமோ,
முடிபோட்ட பந்தமோ
அவள் மட்டும்
இன்றுவரை எனை
மறந்தாளில்லை……….
கரைசேர துடுப்பிருந்தும்
கரையேறும் எண்ணமில்லை,
நிலவின் ஒளியில்
பழைய நினைவுகளில்
மிதந்தே வாழ்கிறோம்………
வாழ்க்கையோ தூறல்
போடுகிறது,
வானவில்லோ
வாழ்த்துப்பா இசைகிறது,
இந்த கொரானோவெல்லாம்
எங்களை என்ன
செய்துவிடும்…………….
இயற்கையின் அழைப்பே
இதுவென்றால், தயக்கமில்லை
இணைந்தே வருவோம் என்பதே
எங்கள் கோரிக்கை.