எழுதியவர் –#கவிஞர்_கோபிகிருஷ்ணா

மன்னனை மன்னன்
அழித்து அழித்து
எழுதப்பட்ட வீர வரலாறு இங்கே நூறு!
இன்னொருவரின் இன்னுயிர் எடுக்காது
அவன் வம்சத்தை அழிக்காது
காத்த வீர மன்னன் இங்கே யாரு!
மக்களை காத்து,
மண்ணை காக்கும்
மன்னன் ஒருவன் இருக்கையில்,
அம்மன்னனின் தலை கொய்து
அந்நாட்டை கைப்பற்றி
மற்றொரு மன்னன் ஆள்வதை
அபகரிப்பு என்று கூறாது
வீரம் என்று எழுதியதாரு!
கற்கால மன்னர்களின்
பொற்கால ஆட்சியின்
சிற்பக்கலை கண்டு
தற்காலத்திலும் வியக்கிறோம்!
ஆனால்,
பண்டத்துப் பண்டத்து முன்
மன்னர்களின்
சிற்பக்கலை பேசும்
ஆளுமையான ஆலயங்களை அழித்து,
பண்டத்துப் பின் பண்டைய
மன்னர்கள் தன்னுடைய
ஆளுமையில் எழுப்பப்பட்ட
நாகரீக கலாச்சாரம் பேசும்
சிற்பங்களை கொண்டு
வரலாற்றில் இடம் பிடித்தது
எவ்வகை வீர வரலாறு கூறு!
வாளெடுத்து போர்தொடுத்தால்
வீரம் என்று எழுதிவைத்துவிட்டீர்
இன்று சிறார்களும்
வாளெடுத்து வீசுகிறார்கள்
வீர சாதியம் பேசி
அதில், வீழும் தலைகள்
அண்டை வீட்டார்களும்,
உறவினர்களுமே..
இரத்த பூமியில் மனிதம் வாழுமா?
இரக்கம் என்பதை மறந்தே சாகுமா?
வாழவைப்பதே வீரமென்று
இனி மாற்றி எழுதுங்கள்
புதிய வரலாறு!