விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.
குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னராக இயக்குனர் திருவின் மனைவி, கனி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் ரசிகர்கள் மத்தியில் கோமாளியாக பிரபலமானவர் சக்தி. இவர் இதற்கு முன் Youtube மற்றும் டிக் டாக் தளத்தில் பிரபலமாக இருந்தார்.
ஆனால் தற்போது குக் வித் கோமாளி மூலம் பல ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இந்நிலையில் குக் வித் கோமாளி சக்தி, புதிதாக பைக் ஒன்று வாங்கியுள்ளார்.
அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படித்துள்ளார்.
இந்த பதிவிற்கு கீழ், KPY பாலா, புகழ், ரக்ஷன், ரித்திகா, மற்றும் பல குக் வித் கோமாளி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
