வரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களம் அடையாள இலக்கத்துடன் பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போது அடையாள இலக்கம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள இலக்கம் தேசிய அடையாள அட்டையைச் செயலாக்கப் பயன்படுத்தப்படும்.
இது பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயற்பாடுகளில் பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கு வசதியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக, ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அடையாள இலக்கங்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட நிலையில் இனிமேல் பதிவாளர் திணைக்களமும் அவ்வாறு செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளது.