எழுதியவர் -எம்.வஸீர். வாழைத்தோட்டம்

வாரமாகும் ரமழானில்
நமக்களித்த நோன்பு
விளங்காதோர் இருக்கின்றார்
இன்னுமதன் மாண்பு
தரமான மனிதனாக
மாற்றுதற்கு என்று
தகுதியுண்டு நோன்பிற்கு
மாத்திரம்தான் சான்று
நரம்புகளில் ஊறிப்போன
பாவங்கள் எல்லாம்
நீக்கிடலாம் ரஹ்மத்தான
நோன்புகளை நோற்றால்
கரமாகும் பற்றிசெல்ல
நோன்புகளோ நம்மை
கரைசேர்க்கும் நிச்சயமாய்
சுவனத்தின் அண்மை!
சிறைக்கூட மாகுமெமக்
கிந்தஉலகம் ஆனால்
சுவனந்தான் முஸ்லிமுக்கு
உலகமங்ககு போனால்
இறையோனின் ஆணையது
நோன்புகடமை ஆகும்
இதையாரும் எள்ளளவும்
மாற்றஏலா தாகும்
குறைபாடு உள்ளவனே
மனிதபடைப் பாகும்
கரித்திடுமே அவன்பாவம்
நோன்பின்பண் பாகும்!
பிறைபார்த்து பிடித்தோமே
நோன்பைநாமும் எண்ணி
பிறையோடு போனதன்றோ
இந்தநோன்பும் விண்ணை!
இன்னும்பல சிறப்புண்டு
எழுதுதற்கு நோன்பை
இதுபோதா என்றிறைவன்
தந்தானே ஈதை
மண்ணிலுள்ள முஸ்லிமுக்காய்
பெருநாளை தந்தான்
மகிழ்ச்சியாக கொண்டாட
வேண்டுமென்று சொன்னான்
விண்ணிலுள்ள மலக்குகூட
மண்ணைவந்து ஒன்றாய்
வாழ்த்துகூறி ஆசிகளை
வழங்கிசெல்வர் நன்றாய்
கண்ணியமாய் கிடைத்ததிந்த
பெருநாளில் கூடி
கருணையாளனை பிரார்த்திப்போம்
மக்கள்நலன் நாடி!