
தலை பிரவசம்
தாரம் தாயாகிறாள்
அவளும் குழந்தையுடன்
புதிதாய் பிறக்கின்றாள்
தொப்புள் கொடி
கத்தரிக்கும் நொடியுடன்
அவளுக்கான புதிய
நேசம் புத்தூக்கம்
புதிய அந்தஸ்து
புதுவரவாகிறது
தொடரும் பிரவசங்களால்
மீண்டும் மீண்டும்
மறு பிறப்பெடுக்கிறாள்
பிரவசம் என்பது
குழந்தைகளோடு
தாய்க்கும் புதிய
பிறப்பே
எந்த ஆணினாலும்
மனைவியின்
பிரசவ வலியை
உணர்வு ரீதியாக
உணரமுடியாது
கண் முழித்து இருக்க
நடக்கும் வாழ்வுக்கும்
சாவுக்கும் இடையிலான
போராட்டமே
பிரவசம் என்னும்
மறுபிறப்பு
இதை மனதால்
உணரும் எந்த கணவனும்
மனைவியை
துன்பக் குளியில்
தள்ளமாட்டான்…
பாவலன்