
பௌத்த பிக்கு ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது சடலம் இன்று பகல் போகம்பர பஸ் நிலைய அருகிலிருந்து மீட்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.