
எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
எனினும் இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.