
தேவையான பொருட்கள்:
- மாங்காய் (புளிப்பில்லாதது) – 2
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு (கொரகொரப்பாகப் பொடித்தது) – 2 தேக்கரண்டி
செய்முறை:
- மாங்காயைச் சுத்தமாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- வேக வைத்த மாங்காயை ஆறவைத்து, தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும். (கொட்டையை நீக்கி விடவும்)
- அதனுடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.
- குளிர்ச்சியான பின்பு அதனை எடுத்துப் பயன்படுத்தவும்.
குறிப்பு: இந்தக் குளிர்பானம் வட மாநிலங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.