
நேற்றைய தினம் 7.05 மணி தொடக்கம் 7.12 மணிவரையான சில நிமிடங்கள் வெளிச்சமான பொருளொன்று வானில் அசைந்துசெல்லும் காட்சியானது இலங்கையில் உள்ள மக்களின் வெற்று கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. இந்த வெளிச்ச அசைவை கண்ணுற்ற மக்கள் ஆச்சரியமாய் பார்த்துள்ளனர். பின்னர் அது சர்வதேச (ISS) விண்வெளிமையம் எனத்தெரியவந்துள்ளது.
இதில் தற்போது 4 அமெரிக்கா, 2 ரஷ்யா, 1 ஜப்பான் என 7 விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் பயணிக்கின்றனர்