எழுதியவர் – தயாளன்

மனிதா என்னை
நீ அழித்தாலும்
எஞ்சிய
என் உயிரிலிருந்து
என்னை உனக்கே
நான் தருவேன்
மனிதா
மற்றவனைக்கொன்று
வாழப்பழகியதால்
நீ மனிதனானாய்
மற்றவனைக் காத்து
வாழ்ந்ததால்
நான் மரமானேன்.
நான் மரம் மரித்தாலும்
மண்ணுக்கு பயனுள்ள உரம்.
மனிதா நீ மரித்தால்……?