
எழுதியவர் – குமரன்விஜி.
பேச்சு கேட்காத
கழுதை
என்ற சொல் வாங்கி வந்தேன்
உன்னிடம் நிறைய
பேச்சுகள் வாங்குகிறேன்.
என்
வெப்பம் நீயென்று
பருவ வானிலை
அறிவிப்பு வருகிறது
நான்
ஐஸ்கிரீமில்
உருகத் தொடங்குகிறேன்.
மழையோடு
பேச கொஞ்சம் தாமதமாகும்
இது கோடைகாலம்
உன்னோடு பேசுகிறேன்
பேசப்பேச சொல்லில் மழை.
நல்லவேளை
நண்பனை
கழட்டிவிட்டு வந்தேன்
என் முத்தத்தை
அவன் கேட்பான்.
யார் வேண்டுமானாலும்
திட்டட்டும்
காதென்பது
இப்போதைக்கு
காதலை மட்டுமே கேட்கும்.
இளைய நிலவரம்
குமரன்விஜி.