நீலகிரி அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினருடன் பயணித்த ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 விமானப் படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
கோவை சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தனர்.
பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்தில் சிக்கியது. கடந்த ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன.