
தமிழர்களுக்கு நீதி கேட்டு உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமார் அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ருவிற்றரில் கருத்து வெளியிட்டுள்ளர். அவர் தெரிவித்திருப்பதாவது, “நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்” என்பதாகும்.