எழுதியவர் – குமரன்விஜி

நினைவுகளுக்கு
கை நிறைய கிளைகள்
கால் நிறைய வேர்கள்
அது ஊன்றி நிலைக்க
வேர்பிடித்து
கொள்கிறது
சட்டென்று யாரேனும்
ஏதும் கேட்டால்
கை ஊன்றி எழுந்து வந்து
நடந்ததை சொல்கிறது
நினைவுகளில்
நெருப்பு பிடித்தாலும்
பூக்கள்
மலர்ந்தாலும்
நாம் தடுக்க முடியாது
காலத்தில் பின் சென்று
தடுக்கும்
காலம் ஏதுமில்லை
நினைவுகள் பற்றி
இப்படி குறிப்புகள் எழுதிவிட்டு
இறுதியில் உன்னை எழுதுகிறேன்
நீ
சரிவிகிதத்தில்
நெருப்பையும் பூவையும்
கலந்து செய்த
நினைவுகளை விட்டுவிட்டுப் போனவள்
நினைவுகள் கொஞ்சம்
கனமானது
பூமிக்குள்
பல ஆயிரம் ஆண்டுகள் தேங்கிய
நீரைப்போல் நீ.
குமரன்விஜி