
//வார்த்தைகளில் அரூபங்கள்
இலைக்கூடெரிவுகளென நிணமாயும்
குருதியாயும் எண்ணங்கள்
கடலின் அலையெறிவென
தழுவித் தழுவி மீள்கின்றது
ஒவ்வொரு துளிகளும்
மனதில் அப்பிக்கிடக்கிறது .//
ஒரு தேர்ந்த இடைவிடாத வாசிப்பு அரக்கியொருத்தியின் குறிப்பு. ❤️
விரிவான மதிப்புரையை எதிர்பார்க்கிறேன்.
இயல்பிலேயே நிணங்களில் ஓடும்
சொற்கள் தான் மொழிமை சேர்ந்து
இங்கு திரண்டிருக்கின்றன….
அவை ஆன்ம நிறைவில் ஊறி
வலிந்து எழுதப்படாமல் உணர்ந்து
உயிர்ப்போடு சிறகடித்து வானெழுகிறது..
” மூச்சடைந்த காற்று
இரவுத் திரை நிழலாய்” பற்றி எரிந்து
உருகுகிறது…
தனிமை பிறிதொருவரால் உடையத்
தேவையில்லை
அதை நிறமிட்டு அதனுள்
அமிழ்ந்து ஆற்றலுடைக்க வேண்டும்
வார்த்தகளில் அரூபங்கள்
இலைக்கூடெரிவுகளென நிணமாயும்
குருதியாயும் எண்ணங்கள்
கடலின் அலையெறிவென
தழுவித் தழுவி மீள்கின்றது
ஒவ்வொரு துளிகளும்
மனதில் அப்பிக்கிடக்கிறது .
தங்கள் மொழிமை அபாரமானதும்
இலகுவில் யார்க்கும் வாய்க்காததும்
தொடரட்டும்
அன்பும் வாழ்த்துக்களும் ❤
கயூரி புவிராசா