
கோவிட் நிலைமையைப் பொறுத்தவரை நாடு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று ஐ.டி.எச் என்ற தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் சரியான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் நிலைமை ஒரு பெரிய பேரழிவில் முடிவடையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் ஒரு பெரிய அழிவைத் தவிர்க்க வேண்டுமானால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புடன் மற்றும் சரியான முறையில் எடுப்பது மிக முக்கியமானது என்று அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.