
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆலயத்திற்குள்ளிருந்த புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவிற்கான கணனி களவாடப்பட்டுள்ளது என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். மதத்தின் மீதான பகைமையா அல்லது இச்சம்பவத்திற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.