
தேவையான பொருட்கள்:
- தேங்காய் – 2 எண்ணம்
- பச்சரிசி – 4 கப்
- சீரகம் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பச்சரிசியைக் குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
- அதன் பிறகு, தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
- அரிசி நன்றாக ஊறிய பிறகு தேங்காயையும், அரிசியையும் சேர்த்து நன்றாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்திருக்கவும்..
- மறுநாள் அந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து, தண்ணீர் விட்டுக் கஞ்சி போலக் காய்ச்சி மாவில் ஊற்றிக் கலந்து, அதில் சீரகத்தை போட்டு தோசை வார்க்கலாம்.