எழுதியவர் – இரா.கௌரிபாலா.

கமுக மரத்து ஓலையும்
கட்டை வண்டிச் சவாரியும்
காற்சட்டை போட்ட தம்பிமார்
வால்களாய்த் தொங்கிய வாறே
அண்ணன்களோ சவாரி செய்திட
அரும்புகள் மகிழ்ந்திடும் விளையாட்டு
அந்தநாள் ஞாபகத்தைத் தந்துநிற்க
அருமையான பராயம் கண்முன்னே
காட்சிகளோ மனதிலே வந்துபோக
காண்பவை சொற்கத்தைக் காட்டுதே
காற்றாடி செய்து சுழற்றினோம்
காகிதக் கப்பலில் ஏறினோமே
மழைவந்நு மண்ணில் உதிக்க
மழலைகள் நாம் துள்ளிக்குதிக்க
மன்றாடிப் பெற்றோர் பின்னே
மகட்கு மருந்தாகும் முத்தமதே
துடிப்பான இளமை அன்று
துன்பம் கண்டு அஞ்சுவதில்லை
துணிந்தே வாழ்வை எதிர்காண
தூணாக உறவுகள் சங்கமமே.