நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பிலும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Subscribe
Login
0 Comments