
எழுதியவர் – சசிகலா திருமால்
திக்குத் தெரியாத காட்டில்
திசைகளை தேடி திரிபவனின்
மனநிலை போல்தான்
தடைகளை தாண்டி
வாழ்வில் வளம் பெறுவதும்…
தாயின் கருவறை இருளிலிருந்து
வெளிச்சம் காண துவங்கியதும்
ஓர் தடை தாண்டிய பயணம் தான்…
முயற்சியும் பயிற்சியும் உள்ளவனுக்கு
இரும்பும் இலகுவாகத்தான் தெரியும்…
தடைகளை எதிர்கொள்ளப் பழகிக்கொள்
தோல்விகள் தானே ஓடும் புறமுதுகிட்டு…
உனக்கான பாதையை நீயே செதுக்கு
உழைப்பையும் ஊக்கத்தையும் உரமாயிடு…
தன்னம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டே
தடைகளைத் தகர்த்தெறி….
நிலத்தில் தவறி விழுந்த விதையே
தடைகளை தாண்டி முட்டி முட்டி
முளைத்து துளிர்விடும் போது
தன்னம்பிக்கையுள்ள நாம்
தடுமாறலாமா?…
முயற்சி செய்…
முயன்றால் எட்டும் உயரம்தான்
வெற்றி…