எழுதியவர் – கோபிகை

பிரகாசித்து எரியும்
உயிர்ச் சுடரில்
நினைவு முட்களின்
சிதறல்…..
அடங்கித் தணியும்
ஆத்மாவின் தாகத்தில்
ஓங்கி நிற்கிறது
சூரிய வெம்மை.
அலைப்புறும் பறவையின்
ஓசைகளில்
குடியிருக்கிறது
குரோதம்…..
துன்பங்களைச்
சபிப்பவனுக்கு
இன்பங்கள்
சொந்தமில்லையே!!
திறக்கும் போதெல்லாம்
விரிந்துகொள்ளும்
புத்தகத்தின்
ஒரே பக்கத்தைப் போல
வலிகளுக்கு
விடைகொடுக்க
வழுக்கிச் செல்கிறது
மனச்சுவர்.
தீதும் நன்றும்
பிறர்தர வாராதே…..
தொலைவும் மலைப்பும்
நாம் நகராத வரைதான்…..
கோபிகை.