
சித்திரைத் திருமகளே! வருக! வருக!
இத்தரை செழிக்க இன்னருள் தருக!
சித்திரை புத்தாண்டு முத்திரை பதிக்கட்டும்
வித்தகர் எல்லோரும் சத்தியம் பேசட்டும்
முத்தமிழ்த் தாயும் முகம்மகிழ்ந்து வாழ்த்தட்டும்
இத்தரை உயிர்களெல்லாம் இன்பமாய் வாழட்டும்
நீதி நிலைக்கட்டும் நிம்மதி பிறக்கட்டும்
சாதியம் இல்லாத சமத்துவம் பெருகட்டும்
அன்பும் அறமும் ஆல்போல் தழைக்கட்டும்
என்றும் இவ்வுலகில் நன்மைகள் பிறக்கட்டும்
ஏழ்மை இல்லாது வளமை பெருகட்டும்
தாழ்மை இல்லாது தரணி செழிக்கட்டும்
வாழ்க்கை இனிக்கட்டும் வையகம் சிறக்கட்டும்
வாழ்வாங்கு வாழ வானவன் அருளட்டும்
அன்பன் கவிநெஞ்சன்
அரங்க. இராசகோபால்