
தேவையான பொருட்கள்:
- சம்பா கோதுமை ரவை – 1 கப்
- பாசிப்பருப்பு – 1/2 கப்
- வெல்லம் – 2 கப்
- நெய் – அரை கப்
- ஏலக்காய்ப் பொடி – 1/2 தேக்கரண்டி
- ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
- பச்சைக்கற்பூரம் – 1 சிட்டிகை
- முந்திரிப் பருப்பு – 10
- பாதாம் பருப்பு – 5
- உலர் திராட்சை – 10
செய்முறை :
- அடுப்பில் ஒரு தாச்சியை வைத்து, அதில் சிறிதும் எண்ணெய் விடாமல் எடுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவை மற்றும் பாசிப் பருப்பைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
- அதன் பின், ஒரு குக்கரில் இரண்டையும் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பைக் குறைவான நிலையில் வைத்து கொள்ளவும்.
- குக்கரில் நான்கு விசில் வரும் வரை அதனை நன்றாக வேக விடவும்.
- அதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து, அதனை வடிகட்டிப் பின்னர் ஒரு சட்டியில் ஊற்றி அதனை அடுப்பில் வைக்கவும்.
- வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதுமே, குக்கரில் முன்பு வைத்துள்ள கோதுமை ரவை கலவையில், சர்க்கரைக் கரைசலை ஊற்றி, சிறிய அளவிலான நெருப்பில் கிளறவும்.
- அதனுடன் ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி மற்றும் முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்துக் கொண்ட பிறகு நெய் விட்டுக் கிளறி எடுத்தால் சுவையான சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் தயார்.