சந்தையில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டொலரின் பெறுமதிக்கு அமைய கோதுமை மாவின் விலை தீர்மானிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.