
தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம், பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி, தொழில் ஆணையாளர், 11ஆவது மாடி, கொழும்பு 15 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விபரங்களை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.