
நேற்று முதல் கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்துள்ளது.
அந்த வகையில், வாராந்தம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகைதரும் வாடிக்கையாளர்கள், உள்ளுர் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பேணவும், உடல் வெப்பநிலைமையை பரிசோதிக்கவும் கோரப்படுவர் .
வாடிக்கையாளர்கள், அலுவலகத்திற்கு வருவதற்கான முன்னனுமதியைப் பெற வேண்டும்.
அத்துடன், வாடிக்கையாளர் தெரிவுசெய்த நிலையம், முன் அனுமதி பெறப்பட்ட தினத்தில் திறந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பிரித்தானிய விசா விண்ணப்ப மையம் அவித்துள்ளது.