
தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் வசிக்கும் 75 வயதான பெண் ஒருவர் நிமோனியா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இது யாழ்மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா மரணம் என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.