இலங்கையில் 34 குழந்தைகளுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புலேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

இவர்களில், 21 குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மேலும் ஐந்து பேர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் அவர் கூறினார்.
குறித்த நோயால் , காலி கராபிட்டி மருத்துவமனையில் இருந்து ஆறு குழந்தைகளும், கண்டி மருத்துவமனையில் இருந்து நான்கு குழந்தைகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ்ப்பாணம், தியதலாவ, குருநாகல் மற்றும் பதுளை மருத்துவமனைகளிலிருந்தும் இந்த தொற்றுடன் குழந்தைகள் பதிவாகியுள்ளனர். இந்த நோய் கொரோனா தொற்றுடன் தொடர்புடையது. கொரோனா தொற்று ஏற்பட்டு தொடங்கிய இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் இந்த நோய் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக வயிற்று வலி, தோல் அரிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவப்பது ஆகியவைஇருக்கும் எனவும் இந்த நோய் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் குழந்தை மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்தார்.