
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.