
தேவாலயம் அழகுற அலங்கரிக்கப்ட்டிருந்தது. அங்கே நடந்த திருமணத்திற்குத் ஒருவர் தன்னுடைய மகனை முதன் முதலாக அழைத்துச் சென்றார்.
புத்திசாலியான அந்தப் பையன்அப்பாவிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பாவும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென அவன் கேட்டான், “அப்பா, பொண்ணு ஏன் வெள்ளைவெளேர்ன்னு டிரஸ் போட்டிருக்கு?”
உடனே அந்த அப்பா, “தேவதை வெள்ளை டிரஸ் போட்டிருக்கும் இல்லியா. இன்னிக்கு வாழ்க்கையில் அந்தப் பொண்ணுக்கு எல்லா சந்தோசமும் வந்து சேரப் போகுது அதனால்தான்…” என்று சொல்லி வைத்தார்.
”அப்படியா?” என்று கேட்ட பையன், “சரிப்பா, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் போட்டு இருக்காரு?” என்று கேட்டான்.
அப்பாவிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்குப் பதில் தெரிந்தாச் சொல்லுங்களேன்…!