
இன்று காலையில் திருகோணமலை, முதலியார் குளத்துக்கு அருகில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மின்சார திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர் குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்ததாக தெரியவருகின்றது. திடீர் மரண விசாரணை அதிகாரியின் பார்வையிடலின் பின்னர் சந்தேகங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.