
சிறு குழந்தையொன்றை பயன்படுத்தி, குருநாகல் பகுதியில் கொள்ளையிடும் சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
தங்கம் வாங்குவது போல, பெண்ணொருவர் சிறு குழந்தையுடன் நகைக்கடைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண், வர்த்தகருடன் விற்பனை தொடர்பில் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், மறுபுறத்தில் குழந்தை தங்க ஆபரணத்தைக் கொள்ளையிட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழந்தை தங்காபரணத்தை கொள்ளையிடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.