
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றது. குறித்த இரத்ததான முகாமில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேன்ர ரணசிங்க கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தார். இந்த இரத்ததான முகாமில் 150க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்த வங்கிக்கு குருதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.