
உழவு செய்ய தெரிந்தவனுக்கு
ஊழல் செய்ய தெரியாததாலோ என்னவோ
இன்னமும் வயிற்றில்
வறுமை எனும் கீறலோடு
சுற்றித் திரிகின்றான்
சிலைவையென கலப்பையை சுமந்துக்கொண்டு…
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோவிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோவிலுக்கு பிறப்பென்பதே இல்லை…
விவசாயம் அழிந்துவிட்டால்
உண்ணும் உணவிற்கு வழியில்லை
விவசாயிகள் அழிந்துவிட்டால்
பின் வருந்தி பயனில்லை…
எத்தொழிலிலும் போலிகளுண்டு
விவசாயம் ஒன்றை தவிர…
காட்டில் வேலை செய்பவன் கேவலமாகவும்
கணினியில் வேலை செய்பவன் கௌரவமாகவும் தெரியலாம்..
ஒன்று மட்டும்
தெரிந்துக் கொள்ளுங்கள்..
“அரிசியை” இண்டர்நெட்டில்
டவுன்லோட் செய்ய முடியாது..
இதோ…
இந்தியாவின் முதுகெலும்பு
சந்தியில் கிடக்கிறது
அதைக்கூட கண்டுக்காமல்
ஆட்சியொன்று நடக்கிறது..
விவசாயிகளின் வயிற்றில் கீறல் விழுந்த
நாட்களை மறவாதீர்கள்…
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது விவசாயமாக இருக்கட்டும்…
எழுதியவர் – சசிகலா திருமால்