
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டரைவயதுக் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தனது விளையாட்டுப்பொருள் கிணற்றில் விழுந்துவிட்டதனால் அதை எடுக்க முற்பட்டுள்ள வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உதயராஜ் ஹம்சவர்த்தினி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.