
கவிதைகளுக்காக
நான் காத்திருப்பதில்லை….
வார்த்தைகளோடு
நான் மன்றாடுவதில்லை.
வந்தால் அதுவாக வரும்.
முல்லை ஒன்று
மெல்ல அவிழ்வதுபோல
ஒரு அதிகாலைபொழுது
இயல்பாய் புலர்வதுபோல….
தென்றல் வருடும்பொழுது
கிளைகள் நடனமாடுவதைப்போல….
ஒரு குழந்தையின்
குறுஞ்சிரிப்பைப்போல
அழகாய் இயல்பாய்
அதுவாக வரும்…..
கவிதைகளுக்காக
நான் எப்பொழுதும்
காத்திருப்பதுமில்லை
வார்த்தைகளோடு
நான் மன்றாடுவதுமில்லை.
நட்சத்திரப்பாடகன்