எழுதியவர் – வருண்

கற்று உணர்
உறவு ஓர்
பல்கலைகழகம்…!?
கற்று உணர்
காதல் ஓர்
காவியத் திலகம்…!?
கற்று உணர்
காமம் ஓர்
கட்டில் சுகம்…!?
கற்று உணர்
காசு பணம் ஓர்
காகிதத்தின்
இன்னொரு முகம்…!?
கற்று உணர்
இளமை ஓர்
இன்பத்தின் இடம்…!?
கற்று உணர்
இல்லறம் ஓர்
கூத்தாடும்
கு(நி)றை குடம்….!?
கற்று உணர்
அன்னை ஓர்
அன்பின் வரம்…!?
கற்று உணர்
ஆசை ஓர்
அழிவின் துவக்கம்…!?
நீ
கற்காமல்
உணராமல்
வாழ்வது என்றும்
வாழ்க்கை இல்லை…!?
ஏட்டில்
இருப்பதும்
எழுத்துக் கூட்டி
வாசிப்பதும்
எதார்த்தங்களைத்
எப்பொழுதும்
தருவதில்லை…!?
கற்று உணர்….!?