
வடசென்னை, மாரி 2, அசுரன், பட்டாஸ் என தனுஷ் நடித்த நான்கு திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ள நிலையில் நேற்று வெளியான ‘கர்ணன்’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும், அவர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் தனுசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்ப பார்த்தாலும் ஹிட் கொடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ? கர்ணன் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.