எழுதியவர் – கோபிகை

இதயச் சத்திரத்தில்
நினைவு விருந்தாளிகளின் வருகை….
செம்புழுதிப் புயலாய்…
தூய பனிக்காற்றாய்…
வடிவங்கள் மாறுபடுகிறது….
நினைவுகளின் நெருப்பில்
வெந்துபோகிறது மனம்…
இரைச்சலுக்கிடையில்
நிசப்தமாய்
ஆழ்ந்த அமைதி….
உற்று நோக்கினால்,
அமைதியின் ஆழத்தில்
இசையின் இனிமை
மேம்போக்கானதே….
வாழ்க்கை விளையாட்டை
அறியாமல் முடியாது.
முறையாக விளையாடாதவனை
அதிலிருந்து அகற்றிவிடும்
இந்த உலகம்…
கனவுகள் அற்றவனுக்கு
மண்ணும் விண்ணும்
ஒன்றுதான்….