
இலங்கையில் இன்வரும் காலங்களில் தேர்தல் கட்சிகளைப் பதிவுசெய்யும் போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இவ்விடயம் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறுகையில் இனம், மதத்தின் அடிப்படையில் இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தினை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.