
ஒமிக்ரோன் (Omicron) மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும் டெல்டா மாறுபாடு 23 மற்றும் அல்பா மாறுபாடு 8 பிறழ்வுகளைக் கொண்டுள்ளன என்றும் வைத்தியர் ஜூட் ஜயமஹா (Jude Jayamaha) தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, ஒமிக்ரோன் மாறுபாடு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது என குறிப்பிட்ட வைத்தியர் அதே நேரத்தில் மற்ற காரணிகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,